Science Fact - கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

Science Fact - கொதிக்கும் நீரை ஊற்றினால் மெல்லிய கண்ணாடிக் குவளையை விட தடித்த குவளை எளிதில் உடைந்து விடுவது ஏன் ?



கண்ணாடி ஓர் அரிதில் வெப்பக் கடத்தி; அதாவது கண்ணாடியில் வெப்பம் மிக மெதுவாகச் செல்லும். எனவே கொதிநீரைத் தடித்த கண்ணாடிக் குவளையில் ஊற்றினால் அதன் தடித்த சுவர்ப்பகுதியில் வெப்பம் மிக மெதுவாகப்பரவுகிறது.

இதன் விளைவாக குவளையின் உட்பகுதியில் உள்ள வெப்பமானது வெளிப்பகுதியில் பரவியிருக்கும் வெப்பத்தைவிட மிக அதிகமாக இருக்கும்; அதாவது வெப்பம் சமச்சீரற்றுப் பரவுகிறது எனலாம். இதனால் சுவர்ப் பகுதியில் சமமற்ற விரிவாக்கம் நிகழ்ந்து உள்ளழுத்தம் உண்டாகிக் கண்ணாடியில் விரிசல் ஏற்படுகிறது. மாறாகக் கொதிநீரை மெல்லிய கண்ணாடிக் குவளையில் ஊற்றும்போது, அதன் சுவர்ப் பகுதி தடிமன் குறைந்து இருப்பதால் வெப்பம் ஓரளவு சமச்சீராகப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே கண்ணாடியில் விரிசல் உண்டாவது தவிர்க்கப்படுகிறது. தற்போது பைரக்ஸ் (Pyrex) எனும் புதுவகைக் கண்ணாடி புழக்கத்தில் வந்துள்ளது.

வெப்பநிலை உயர்வு காரணமாக சுவர்ப் பகுதியில் சமச்சீரற்ற விரிவாக்கம் நிகழாமல் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வகைக் கண்ணாடியைக் கொண்டு செய்யப்படும் குவளைகள் வெப்பநிலை உயர்வு காரணமாக எளிதில் உடைவதில்லை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி