Application are invited for the post of Assistant Professors [ Apply to the Principal on or Before 08.04.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2019

Application are invited for the post of Assistant Professors [ Apply to the Principal on or Before 08.04.2019 ]



2 comments:

  1. March 28, 2019 at 8:36 AM
    மதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!


    பள்ளிக்கூட ஆசிரியர்களான நாங்க எங்களோட கஷ்டத்த ஷேர் பண்ணுறோம் !!!������


    நண்பர்களே ! நாங்க சுமார் 4500 பேர்க்கு மேல மதுரை காமராஜ் பல்கலைக்கழத்துல 2001 -2016 வரைக்கும் M.Sc(CS and IT) படித்தோம் ,சுமார் 2000 பேர்க்கு மேல B.Ed முடிச்சிருக்கோம்.இப்ப நாங்க TRB Computer Instructor Grade-I க்கு Apply கூட பண்ணமுடியால.MCA/M.SC(CS)/M.SC(IT) மட்டும் Apply பண்ணலாம்.நாங்க எல்லாரும் இப்ப பள்ளிக்கூடம்/கல்லூரி வேலை பார்த்துட்டு இருக்கோம்.நாங்க படுச்சது M.Sc(CS) Syllabus தான் பெயர் மட்டும் M.Sc(CS and IT) .

    இத ஏன் MKU நடத்தணும்?Board Of studies என்ன பண்ணுச்சு ?Acadamic Council என்ன பண்ணுச்சு ? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல .M.Sc(CS and IT) கொண்டு வந்தவுங்க படுச்சவுங்களா? பணத்த கொடுத்து வேலைக்கு வந்த பேராசிரியர் எப்படி இருப்பாங்கன்னு நினைக்க தோணுது.பேராசியர்களே இப்படி பண்ற போது மத்தவுங்ககிட்ட நல்லத எப்படிஎதிர்பார்க்கமுடியும்?


    நாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல.குடும்பத்த விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு அலைய முடியல ,பொருளாதார வசதியும் இல்ல,எங்களுக்கு மனஉளைச்சல் தான். கல்லூரி-யூனிவர்சிட்டியா கேட்கசொல்லுது, யூனிவர்சிட்டிஅரச கேட்கசொல்லுது M.Sc(CS and IT) கொண்டு வருவத ஓரே ஒரு நல்ல ஆசிரியர் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்.ஒரு தவறு இப்ப எங்களோட வாழ்க்கைய பாதிக்குது.அதுவும் கல்விக்கு பெயர்போன காமராசர் பெயர வச்சிருக்குற MKU இப்படி பண்ணிருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இத படிக்குறவுங்க மற்ற Group க்கு ஷேர் பண்ணுங்க.இது கண்டிப்பா ஒரு நல்ல ஆசிரியர்/வழக்கறிஞர்/நீதிபதி/அரசியல்வாதி/காவல்துறை/பொதுமக்கள இது போய் சேரும்.இதனால எங்களுக்கு நல்லது கூட நடக்கலாம் அவங்க ஏமாறுவதை கூட தடுக்கலாம்..ப்ளீஸ் உங்களோட ஒரு ஷேர் எங்களுக்கு உதவலாம் ப்ளீஸ். ��தயவு செய்து எல்லாரும் மெயின் subject படிங்க.Ex: B.Com, B.Sc(Botany,Zoology,Chemistry,Physics,Computer Science) படிக்கலாம் ,B.Com(IT),B.Sc(Software System) போல mixed வேண்டவே வேண்டாம்.



    இத படிக்குற ஆசிரிய/பேராசிரிய பெருமக்களே மாணவர்கள மூளைசலவை செய்யாதீங்க.தகுதியில்லாத படிப்ப மாணவர்கள மீது துணிக்காதீங்க.நீங்க வாழ பிறரை கெடிக்காதீங்க “ படித்தவன் பாவம் செய்தல் ஐயோ ஐயோ என்று போவான் “ மனசுல வைங்க, B.Sc(Software/CT/SS/CS and IT)படின்னு படிக்குற மாணவன் வாழ்க்கைய கெடுக்காதீங்க.சேர்க்குறதுக்கு முன்னாடி உண்மைய சொல்லி கல்லூரில சேருங்க .இத படிக்குற மாணவ மாணவியரே நல்ல வழிகாட்டிகிட்ட ஆலோசனை கேளுங்க.நாங்க கூட பேராசிரியர்களால் ஏமாற்ற பட்ட ஏமாளி ஆசிரியர்கள்.


    இப்படிக்கு

    Madurai Kamarai University ஆல் ஏமாற்ற பட்ட M.Sc(CS and IT) மாணவ மாணவியர்


    ப்ளீஸ் !!! share பண்ணாம போயிராதீங்க...������

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லுறது மிக சரியான ஒன்று. நானும் பாதிக்கப்பட்ட ஒருவன் (வேறு ஒரு அறிவியல் படிப்பு, கணினி அல்ல). பின்னர் எனது முதுகலை படிப்பை மீண்டும் தொலைநிலைக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்றேன், இதனால் நான் இழந்தது பல, எனது அனுபவம், காலம் தாழ்த்தி கல்வியியல் படித்தது, டெட் தேர்வு எழுத முடியாமல் போனது, TRB எழுத முடியாமல் போனது, இன்னும் தனியார் பள்ளியில் கூலி வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் அவல நிலை, ஆனாலும் நான் செய்த தவறை நிவர்த்தி செய்ய எனக்கு ஆறு வருடங்கள் ஆனது, நான் இப்பொழுது என்னுடைய துறையில் முதுகலை, கல்வியியல், மாநில பேராசிரியர் தகுதி தேர்வு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தகுதிகளை வளர்த்து விட்டேன், இன்னமும் முயன்று கொண்டே இருக்கின்றேன், அடுத்த ஆசிரியர் தேர்வுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்களும் தொலைநிலை கல்வியில் கணினி அறிவியல் படிப்பை எடுத்து படியுங்கள், மற்றும் நீதிமன்றம் மூலம் equivalence வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களின் படிப்பு ஒன்றும் குறைந்த ஒன்று அல்ல, உங்களை போன்ற பலர் உள்ளனர் தமிழ்நாட்டிலே. இங்கு பல்கலைகழகங்கள் வருடா வருடம் புது புது படிப்புகளை கொண்டு வரும், ஆனால் பாதிக்க படுவது மாணவ சமுதாயம். கிராமத்து மாணவர்கள் என்ன படிப்பு என்று தெரியாமல் புதைக் குழியில் சென்று விழும் அவல நிலை உள்ளது, நாம் படிக்கும் படிப்புக்கு B.Ed, NET, SLET, PhD அதன் பின் அரசு வேலை உள்ளதா என சோதித்த பின்னரே அந்த படிப்பில் நாம் சேர வேண்டும். இன்னும் சில படிப்புகள் கல்லூரி பல்கலையில் நடத்தப்படும், நீங்கள் அந்த படிப்பிலே இளங்கலை, முதுகலை படித்தாலும் அந்த கல்லூரிக்கே சென்று ஆசிரியர் ஆக முடியாத படிப்புகள் கூட உள்ளன. நீங்கள் சேரும்பொழுது இனிக்க இனிக்க பேசி உங்களை ஏமாற்றிவிடுவார், அதன் காரணம் நீங்கள் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு வேலை இருக்கும், அதனால் உங்களை ஏமாற்றி சேர்த்து விடுவர், ஆனால் நீங்கள் ஆசிரியராக கண்டிப்பாக வர முடியாது,
      இது போன்ற படிப்புகள் ஏராளம், எடுத்துக்காட்டாக
      B.Sc Computer Technology
      B.Sc CS&IT
      B.Sc Software engineering
      B.Sc Hotel Management
      B.Sc costume design
      B.Sc Electronics and Communication
      B.Sc Instrumentation
      B.Sc Computer Electronics
      B.Sc Applied Physics Instrumentation
      B.Sc Applied Physics Computer Electronics
      B.Sc Geology
      B.Sc Hospital Management
      B.Sc Hardware and Networking
      இந்த பாடங்கள் M.Scயிலும் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் அதில் சேர்ந்தால் பின்னர் வாழ்நாள் முழுவதும் வீண் தான். சிலர் கூறுவார் நான் வேலைக்கு சென்றேன் என்று, என்ன வேலை என்று பார்த்தால் ஏதோ ஒரு வேலைக்கு சென்றிருப்பர். அதற்கு எந்த படிப்பும் தேவை இல்லை.

      இது போன்ற பல வண்ண படிப்புகளுக்கு காரணமே மக்கள் கொண்டுள்ள மோகமே, கணினி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் குடுப்பதால் பல்கலைகழகங்கள் ஒரே பெயரில் பாடம் நடத்தாமல் பல பெயர்களில் பெயர் மாற்றம் செய்து அதே படிப்பை வழங்குகின்றன, பாடத்திட்டத்தினை பார்த்தால் தொண்ணூறு சதம் அதே பாடங்கள் தான் இருக்கும், ஆனால் பல்கலைகழகங்கள் அந்த படிப்புகளுக்கு சமமானது என சான்று வழங்காது ஏமாற்றும், திட்டமிட்டு படியுங்கள் நண்பர்களே. ஏமாந்துவிடாதிர்கள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி