வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2019

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது!


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வட்டி விகிதங்கள்

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியால் வணிக வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக் கூடிய வட்டி விகிதம் ஆகும். மக்களுக்குப் பணம் தேவைப்படும் போது வங்கிகளிடம் கடன் பெறுவது போன்று , வங்கிகளுக்குக் கடன் தேவைப்படும் போது மத்திய வங்கியை அணுகுவார்கள். அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கிக்குக் கடன் தேவைப்பட்டாலும் சில வணிக வங்கிகள் கடன் அளிக்கும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். அவ்வாறு கடந்த நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என 2 முறை உயர்த்தப்பட்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 -20ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக இருக்கும் என கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி