அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி


ஆங்கிலம் என்றாலே அலறும் மாணவர்களை 15 நாட்களில் ஆங்கிலம் பேசவும்எழுத வைக்கும் மேலுார் சமூக சேவகர் முரளிதர சந்திரசேகரனை 60, கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.முரளிதர சந்திரசேகரன் எம்.எஸ்.சி., எம்.பில்., அமைதி விஞ்ஞானம் முடித்து, பால் பண்ணை நடத்தினார். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாமல் கல்வியை நிறுத்துவதை கண்டு வருந்தினார். பண்ணையை மூடி விட்டு கிராமங்களில் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்று கொடுக்க துவங்கினார்.

இவரிடம் ஆங்கிலம் கற்றவர்கள் சென்னை தலைமையகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். முரளிதர சந்திரசேகரன் கூறியதாவது : அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் 15 நாட்களில் 12 வகையான வினை, துணை விணை சொற்களை பயன்படுத்தி ஆங்கிலத்தில் வார்த்தைகளை உருவாக்கி பிழையின்றிஎழுத, பேச கற்று கொடுக்கிறேன்மாலை நேரங்களில் ஆங்கில மையம் மூலம் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலம் கற்று கொடுக்கிறேன் என்றார்.இவரை பாராட்ட 90257 24675.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி