சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் மறுஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் மறுஆய்வு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, செம்மொழி மாநாடு தொடர்பாக பல பாடங்கள், வரிகள் நீக்கப்பட்ட பின்பு பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. தற்போது மீண்டும் இப்புத்தகங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தகங்களில் பிழைகள், படங்கள் சரியில்லாதவை, படங்கள் தேவை இருந்தும் இல்லாதவை, தேவையே இல்லாதவை, எழுத்து வடிவங்கள் (ஃபாண்ட்) சரியில்லாதவை உள்பட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கான பொறுப்பு ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் 5ம் வகுப்பு வரையுள்ள பாடங்கள் டி.கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், 6 முதல் 10ம் வகுப்புக்கு சாண்ட்லர் பள்ளி(ஆங்கிலம்), ஓ.சி.பி.எம்., பள்ளி(தமிழ்), செயின்ட் மேரீஸ் பள்ளி (கணிதம்), திருமங்கலம் பள்ளியில் (சமூக அறிவியல்), மதுரை மாநகராட்சி இளங்கோ பள்ளி(அறிவியல்)யிலும் இந்த ஆய்வுப் பணிநடக்கிறது. இதற்காக 1400 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் பாடவாரியாக, குழுக்களாக அமர்ந்து ஆய்வு செய்கின்றனர். அக்., 29ம் தேதி அவர்கள் தங்கள் அறிக்கையை "டயட்' நிறுவனத்தில் வழங்குவர். மாநில அளவில் ஐந்து இடங்களில் பாடவாரியாக ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட்டு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஒரு குழு ஆய்வு செய்து பாடப்புத்தகங்களில் தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டன. இப்போது 2வது முறையாக இந்த ஆய்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி