"THAI" 2011-12 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2012

"THAI" 2011-12

தாய் திட்ட ஊராட்சிப் பள்ளிகளுக்கு கூடுதல் வசதி தாய் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கூடுதல் வசதிகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்(தாய்) செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில், குக்கிராமங்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, மயானத்திற்கான அடிப்படை தேவைகள், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலைப்பணிகள் மட்டும் அதிகபட்சம் 30 சதவீதம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் பிற திட்ட நிதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், கைப்பம்பு, கழிப்பிடம், சமையல் அறை, கூடுதல் வகுப்பு கட்டடங்களும் இத்திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி