- Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2012

இந்தியன் வங்கி அறிவித்துள்ள பி.ஓ., பணிவாய்ப்பு பொதுத்துறையில் இயங்கும் வங்கிகளில்இந்தியன் வங்கி மிக முக்கியமான வங்கி என்பதை அறிவோம். கோர் வங்கிச் செயல்பாட்டுடன் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுடனும் இந்தியாவில் 1762 கிளைகளுடன் இந்தியன்வங்கி சேவையாற்றி வருகிறது. ஒரு கட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த வங்கி தற்போது லாபகரமாக இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வங்கியில் 452 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கானஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இங்கே கிளிக் செய்து செய்தி வெளியீட்டை படியுங்கள் தேவைகள் என்னென்ன: இந்தியன் வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் 01.07.2011 க்குள் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ., பி.இ., பி.டெக்.,போன்ற படிப்புகளை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருப்பது கட்டாயத் தேவையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபரங்களறிய இணையதளத்தைப் பார்க்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளுடன் ஆபிஸ் ஆட்டோமேஷன், எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்கள், கம்ப்யூட்டர் என்விரான்மென்டில் பணி புரியுமளவிற்கு தகுதி தேவைப்படும். இதர விபரங்கள்: மேற்கண்ட புரொபேஷனரிஅதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பரிந்துரைக்கப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/- மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இரண்டு வருட பிணைய ஒப்பந்தத்தில்கையொப்பமிட வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழுமையான தகவல்களுக்கு கட்டாயம் இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.03.2012

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி