அரசாணை எண். 123 நிதித் துறை நாள். 10.04.2012 ன் படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஊதியக்குழு கல்வித்துறைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்துமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2012

அரசாணை எண். 123 நிதித் துறை நாள். 10.04.2012 ன் படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஊதியக்குழு கல்வித்துறைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்துமா?

அரசாணை எண். 123  நிதித்(ஊதியப் பிரிவு) நாள். 10.04.2012 ன் படி நியமிக்கப்பட்ட ஊதிய குறைகளை நிவர்த்தி செய்யும் 3 நபர்(செயலாளர் மற்றும் கூடுதல் , இணை செயலாளர்)குழுவானது ஒரு சில துறைகளில் உள்ள குறிப்பிட்ட அலுவலர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இக்குழுவானது அரசாணை எண். 71 மற்றும் அரசு கடிதம் எண். 19111 / PAYCELL / 2011-4 ஆகிய இரண்டு நிதித்துறை சார்ந்த  அரசாணைகளில்  குறிப்பிட்ட அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் மேற்குறிப்பிட்ட அரசாணைகளை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் மேன்மை தாங்கிய சென்னை உயர்நிதீமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த  தமிழக அரசால் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டு மேற்கூறிய அரசாணைகளால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு அவர்களின் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளவர்களும் / இனி வழங்க உள்ளவர்களின் மனுக்களையும் சேர்த்து  ஆராய்ந்து அரசுக்கு இக்குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் கீழ்காணும் துறைகளில் பணியாற்றும் ஒரு சில குறிப்பிட்ட  அலுவலர்களுக்கு  பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். * வேளாண்மைத்துறை *வேளாண்மை பொறியியல் துறை *கால்நடை பராமரிப்பு துறை  *மீன் வளத்துறை *நெடுஞ்சாலைத்துறை *ஊராக வளர்ச்சித்துறை *தொழில் மற்றும் வணிகத்துறை  *தொழிற்சாலை ஆய்வகத்துறை *மாநில சுகாரதாரத் போக்குவரத்து துறை  *மோட்டார் வாகன பராமரிப்புத்துறை  *பட்டுவளர்ச்சித்துறை *மாநில போக்குவரத்துத்துறை  *பொதுப்பணித்துறை  *மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு ஆணையரகம்  *பேரூராட்சிகள்  *மின் ஆய்வுத்துறை *சென்னை மாநகராட்சி  *இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி  துறை  *வருவாய்த்துறை *காவல்துறை *வனத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் குறைகளை களைய இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி