அரசு அதிகாரி ஆக எழுத வேண்டிய தேர்வுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2012

அரசு அதிகாரி ஆக எழுத வேண்டிய தேர்வுகள்

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-ன் படி நிறுவப்பட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இத்தேர்வாணையம் அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்குப் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கிய பணியைச் செய்து வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தகுதிகளுடைய தேர்வுகளை இத்தேர்வாணையம் நடத்துகின்றது, வயது வரம்பு: மேற்கூறிய தேர்வுகளை எழுத விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருத்தல் வேண்டும். அதே சமயம் அதிக பட்சம் 30 வயதை கடக்கக்கூடாது. ஆனால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்), அனைத்து ஜாதியைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிகப்பட்சமாக 35 வயது வரை இத்தேர்வினை எழுதத் தகுதி பெற்றவர்களாகின்றனர். குரூப் 1 தேர்வு: குரூப் 1 தேர்வானது துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உதவி ஆணையர் (வணிக வரித்துறை), மாவட்டப் பதிவாளர் (பல்வேறு துறைகள்) போன்ற பல்வேறு உயர் பணிக்கு நியமனம் புரிவதற்காக நடத்தப்படுகின்றது, இத்தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்முகத் தேர்வு என நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வில் பொது அறிவிலிருந்து 200 கொள்குறி வினாக்கள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பிரதானத் தேர்வு இரண்டு பொது அறிவுத்தாளை கொண்டது. இதில் விளக்கமாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 300 மதிப்பெண் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும். இறுதி கட்டமாக, பிரதானத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இது 80 மதிப்பெண்களுக்கான தேர்வு. பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்களே போட்டியாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும். கல்வித் தகுதி: இத்தேர்வுக்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக ஏதாவதொரு பாடத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குரூப் 2 தேர்வு: குரூப் 2 தேர்வின் மூலம் முனிசிபல் கமிஷனர், உதவி வணிக வரி அலுவலர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப் பிரிவு அலுவலர், இளைய வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கின்றனர். குரூப் 2 தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கொள்குறி கேள்விகள் கேட்கப்படும். (பொது அறிவுத்தாளுக்கு 150 மதிப்பெண்கள், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழித்தாளுக்கு 150 மதிப்பெண்கள்). இதில் தேர்ச்சி பெறுவோருக்கு இரண்டாம் கட்டமான நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். இதன் இறுதியில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித் தகுதி: இத்தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நினைவில் கொள்ள வேண்டியவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத் தாள்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்டிருக்கும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தமிழ் மொழி தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு - பணியில் அமர்த்தப்படுவதற்கு முன் நடத்தப்படும் அடிப்படை தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள்: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் 6-ம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரைக்குள்ளான பாடநூல்களைப் படிக்க வேண்டும். இதில் அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். மேலும், பதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பு வகுப்புகளில் வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம். வணிகவியல், உயிரியல், கலாசாரம் ஆகிய பாடநூல்களைப் படித்தல் வேண்டும். குரூப் 2 தேர்வுக்கான குறிப்புகள்: இதற்குக் கூடுதலாக ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலான தமிழ் மொழி அல்லது ஆங்கில மொழி பாடப் புத்தங்களைப் படித்தல் வேண்டும். விண்ணப்பத்தாரர் தேர்வுக்குத் தேர்ந்தெடுத்துள்ள மொழித்தாள் அடிப்படையில் இதை முடிவு செய்ய வேண்டும். இந்தத் தேர்வுகளுக்கு நீங்கள் படித்துத் தயாராகும்போது, தினமும் ஏதாவது ஒரு ஆங்கில நாளிதழ்படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அதிலிருந்து முக்கிய நிகழ்வுகளைப் பற்றி குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழில் ஏதாவது ஒரு "இயர்புக்" படித்தலும் அவசியம் என்று தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி