ஜுன் 4ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2012

ஜுன் 4ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியமாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம்வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி