- Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2012

கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15,விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இருதினங்களில், ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வி வளர்ச்சி நாளில், மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் குறித்து, அதன் போட்டோக்களுடன் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க, தலைமையாசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி