200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2012

200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!

செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம்என்ற டிராய் நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம். செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி அதிகபட்சமாக 100எஸ்எம்எஸ் வரைமட்டுமே அனுப்பலாம் என்ற உச்ச வரம் பை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு அறிவித்தது. அது மிக குறைவான எண்ணிக்கை என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள்வந்தன.இதையடுத்து, கடந்த நவம்பரில் எஸ்எம்எஸ் உச்ச வரம்பை 200 ஆக டிராய் உயர்த்தியது. எனினும், இது தனிநபரின் கருத்து பரிமாற்றம், பேச்சுரிமையை பாதிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விளக்கம் அளிக்க டிராய், மத்திய அரசுக்கு டிசம்பர் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தனிநபர் அனுப்பும் தினசரி 200 எஸ்எம்எஸ் உச்ச வரம்பு ரத்து செய்யப்படுவதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி