சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2012

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்

அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இதுவரை நிரந்தரப்படுத்தவில்லை.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில், கணக்குப் பதிவியல் தணிக்கையில், மெக்கானிக், பயிர் பாதுகாப்பு, மேலாண்மையியல், கணிப்பொறியியல், தட்டெழுத்து உட்பட 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன.இதில் மொத்தம், 1,100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பு ஊதியத்தில் (தற்காலிமாக) வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக, 2,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இவர்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள், 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதற்காக சான்றுகள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.கடந்த 2010 ஜூலை மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 287 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது.பின்னர், 287 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்வதற்கு கருத்துரு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.சான்றிதழ் சரிபார்த்து நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இன்று வரை பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணை வரவில்லை. இதனால், தற்போதும் அதே சம்பளத்தில் தான் வேலை செய்கின்றனர். இனியாவது, சான்றிதழ் சரிபார்த்த, 287 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியும், காலமுறை ஊதியம்வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி