10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2012

10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொதுத்தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் 10ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. முழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும்,10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. இந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள்தெரிவித்தனர்.  பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாதநிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம்முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி