இணையதள கல்வித் தேடல்: இந்தியாவுக்கு 2ம் இடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2012

இணையதள கல்வித் தேடல்: இந்தியாவுக்கு 2ம் இடம்

கூகுள் இணையதளத்தில் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்களில் இந்தியா உலகளவில் இரணடாம் இடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள உள்ள இணையதள உபயோகிப்பாளர்களில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கல்வி தொடர்பான தேடல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கூகிள் மூலம் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் பெற முடிவதாகவும் சொல்லப்படுகிறது.கைப்பேசியில் இணையதளத்தை உபயோகித்து கல்வி நிறுவனங்களை பற்றி தேடுவதும் 66 சதவீதம் அதிகரித்து உள்ளது. கல்வி நிறுவனங்களின் வீடியோ பதிவுகளை 46 சதவீதம் பார்க்க விரும்புகின்றனர்.கூகிள் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த2008ம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பில் உலகளவில் 8வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி