சிறப்பு தேர்வுக்கு இனி "ஆன்-லைன்' விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2012

சிறப்பு தேர்வுக்கு இனி "ஆன்-லைன்' விண்ணப்பம்

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் "ஆன்-லைன்'னில் தான்விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர்.இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு "ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல்"ஆன்-லைன்' மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும், என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.inஎன்ற வெப்சைட் முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி