மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2012

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு

கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக்கூட்ட நடவடிக்கை குறிப்பு மற்றும் விரிவான விவரம் அறிய பதிவிறக்கம் செய்க...

*அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழாக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.
*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதம் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் 25 பள்ளிகளை ஆய்வு செய்தல் வேண்டும்.
*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருகைபுரிய வேண்டும்.
*அனைத்து தலைமையாசிரியர்களும்,ஆசிரியர்களும் வரும் கோடைவிடுமுறையில் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடு வீடாகச் சென்று கூடுதல் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
*அதிக நர்சரி  பள்ளிகள் உள்ள கிராமத்தில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குதல்.
*அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருக்கும் வகையில் மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
*அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் செஞ்சுலுவைச் சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*மாதந்தோறும் ஜமாபந்தி முறையில் நிலுவையிலுள்ள ஆசிரியர்களின்  கோரிக்கை மனுக்களை பரிசீலினைச் செய்து உடனுக்குடன் உரிய ஆணைகளை வழங்க வேண்டும்.
*அனைத்து பள்ளிகளிலும் Work Done Register பேணப் பட வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி