முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2012

முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர்.மாநில பதிவு மூப்பு அடிப்படையில்,1,080 முதுகலை ஆசிரியர் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்&' வழியாக, மாவட்ட தலைநகரங்களில்உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.சென்னை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் இல்லை. இதர, 29 மாவட்ட தலைநகரங்களில், கலந்தாய்வு நடந்தது.முதல் நாளான நேற்று, அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 396 பேர், பணி நியமன உத்தரவுகளை பெற்றதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, திருச்சியில் இன்று நடக்கிறது. நியமன உத்தரவு பெறும், 1,080 பேரும், இம்மாதமே பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி