தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்ப - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2012

தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்ப

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கநவம்பர் 18-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை ஆகஸ்ட் 21 முதல் 31 வரை www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் செப்டம்பர் 7-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி