ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு பல்வேறு வசதிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்டர்நெட் மூலமாக டெபிட்கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழியாக பணத்தை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.தற்போது புதிதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ரெயில் முன்பதிவு செய்யலாம். இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட் (ஐ.எம்.பி.எஸ்) மூலம் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. கொண்டு வந்துள்ளது.செல்போன் மூலம் வங்கிகளுக்கு இடையே பணம் செலுத்தும் வசதியை ஐ.எம்.பி.எஸ் அனுமதித்துள்ளது. ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணம் டிக்கெட் கட்டணத்திற்காக பிடித்தம் செய்து கொள்ளப்படும். இந்த திட்டத்தில் ரூ.5000 வரை பணம் பரிமாற்றம் செய்ய ரூ. 5 கட்டணமும் அதற்கு மேலான நடவடிக்கைக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்த விரும்புவர்கள் செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை ஐ.எம்.பி.எஸ்-ல் பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக என்னென்ன வசதிகளை பெற முடியுமோ அத்தனை வசதிகளையும் செல்போன் மூலம் பெற முடியும். இன்டர்நெட் வசதி, மற்றும் கம்ப்யூட்டர் இல்லாமல் மிக எளிதாக செல்போன் மூலம் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி