திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73ஆயிரம் பேர் கலந்து கொண்டுதகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத் து விசாரித்தார், மனு தாரர் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி, தகுதி தேர்வு எழுதியவர்களை நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.தமிழக அரசு சார்பாக கூடுதல்அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தகுதி தேர்வு எழுதிய பிறகு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில்பணி வழங்கப்படும். தற்போது பணி நியமனத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது.எனவே எந்த தடையும் விதிக்க கூடாது. தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது என்றார்.இதை கேட்ட நீதிபதி, 18ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி