ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.
அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி