"ஆன்-லைன்' வழி தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று,"டெண்டர்' வெளியிட்டது."ஆன்-லைன்' தேர்வு முறையில், வெளிப்படைத்தன்மை, உயர்ந்த தரத்திலான தேர்வு நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள காகித பயன்பாடு குறைப்பு, மிக விரைவாக தேர்வு முடிவு வெளியீடு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என, தேர்வாணையம்தெரிவித்துள்ளது. கேள்வித்தாள், "லீக்' உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல், தரமான முறையிலும், வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும்,"ஆன்-லைன்' தேர்வு முறையை அமல்படுத்தப்போவதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியிருந்தார். இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்படும் எனவும், அவர் தெரிவித்திருந்தார்."டெண்டர்' வெளியீடு:இதைத் தொடர்ந்து, "ஆன்-லைன்' வழி தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான,"டெண்டர்' நேற்று, தேர்வாணையஇணையதளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) வெளியிடப்பட்டது."டெண்டர்' விண்ணப்பத்தில், தேர்வாணையம் குறிப்பிட்டிருப்பதாவது:சி.பி.டி., (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்) முறையில்,"ஆன்-லைன்' வழியாக தேர்வை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு, தேர்வாணையம் செல்கிறது. தேர்வாணையத்தில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப பயன்பாடு என்பது மிகவும் குறைவு. பல முக்கியமான பணிகள், ஒவ்வொருகட்டத்திலும், மனித சக்தியைகொண்டே நிறைவேற்றப்படுகிறது. அனைத்துப் பணிகளும், கணினிமயமாக்கப்படவில்லை.இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில், தேவையில்லாமல் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.வெளிப்படைத்தன்மை: "ஆன்-லைன்' வழியிலான தேர்வு முறையில், உயர்ந்த தரத்தில்தேர்வை நடத்துவதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்."ஆன்-லைன்' வழியிலான தேர்வு, தேர்வர் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ, பலகட்டங்களாகவோ நடக்கும்.சி.பி.டி., முறையில் தேர்வை நடத்துவதற்கான வழிமுறை களில் கூறப்பட்ட அம்சங்கள்:திட்டத்தை உருவாக்குதல், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, மென்பொருள் (சாப்ட்வேர்), வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்நுட்பங்களை அளிப்பது, தேர்வு நடைமுறைகளை மேலாண்மை செய்வது. தகுதி வாய்ந்த நிறுவனம், "டெண்டர்' படிவத்தை பூர்த்தி செய்து, 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி