பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமன்றம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2012

பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமன்றம

பணியில் இருக்கும் மகன் உயிரிழக்க நேர்ந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்றுசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளராகப் பணியாற்றியவர் ரவிகுமார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந் நிலையில் அவர் கடந்த 2006-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறப்புக்குப் பின் வழங்க வேண்டிய பணப் பலன்கள் முழுவதையும் அவரது தாயார் மாரியம்மாளிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது.எனினும் குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்து விட்டது. தொழிலாளி ஒருவரின்மனைவியோ அல்லது அவரது மகன், மகள் மட்டுமே ஓய்வூதியம் பெறலாம். விதிகளின்படி தாயாருக்கு ஓய்வூதியம் வழங்க இயலாது என்று துறைமுகநிர்வாகம் கூறி விட்டது.இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மாரியம்மாள் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டி. ஹரி பரந்தாமன், திருமணமாகாத மகன் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்று தீர்ப்பளித்தார். குடும்ப ஓய்வூதியப் பலன்களை பெறும் உரிமை பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வழக்கைப் பொருத்தவரை, தனது மகனின் மாத ஊதியத்தை மட்டுமே சார்ந்து மனுதாரர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென மகன் உயிரிழக்க நேரிட்டதால் இனி குடும்ப ஓய்வூதியம் மட்டுமே அவரது ஒரே வாழ்வாதாரம் ஆகும். மேலும், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி, வயதான பெற்றோரை பத்திரமாகப் பராமரிக்க வேண்டிய கடமை அவர்களின் பிள்ளைகளுக்கு உள்ளது.இந்த வழக்கில் தனது தாயாரைப் பராமரித்து வந்த துறைமுகத் தொழிலாளியான மகன் உயிரிழந்து விட்டதால்,தாயாருக்கு துறைமுக நிர்வாகம் குடும்ப ஓய்வூதியம் வழங்கியாக வேண்டும். இதுவரை வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியப் பாக்கியை இன்னும் 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு துறைமுகப் பொறுப்புக் கழகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி