டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2012

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம்

""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும்,"ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில்,"டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.இதுகுறித்து, நடராஜ் கூறியதாவது:ராஜஸ்தானில், அனைத்துப் போட்டித் தேர்வுகளும், "ஆன்-லைன்' மூலம் தான் நடத்தப் படுகின்றன. சில மாநிலங்களில், "ஆன்-லைன்' தேர்வு முறையும், கேள்வித்தாள் முறையும் உள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட, சில வகை தேர்வுகளை மட்டுமே,"ஆன்-லைன்' மூலம் நடத்துகிறது. பெரும்பாலான தேர்வுகளை, கேள்வித்தாள் முறையில் தான் நடத்துகிறது.இந்த முறையில் தேர்வு நடத்துவதற்கு, அடிப்படையில் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அதைச் செய்து, அனைத்து தேர்வுகளையும், "ஆன்-லைன்' மூலம் நடத்தும் திட்டம் உள்ளது. இதற்காக, விரைவில்,"டெண்டர்' விடப் போகிறோம். தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அந்நிறுவனம்மூலம், "ஆன்-லைன்' தேர்வு நடத்தப்படும்.தமிழகத்தில், அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள கணினிகளை பயன்படுத்தி, தேர்வு நடத்தலாம். விடுமுறை நாளில்தான், தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், பொறியியல் கல்லூரிகளின் கணினிகளை பயன்படுத்துவதில்பிரச்னை இருக்காது. இதன்மூலம், கல்லூரி நிர்வாகங்களுக்கு, தனி வருவாயும் கிடைக்கும்.தேர்வு நடக்கும் நாளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு தேர்வர் சென்று, கணினி முன் அமர்ந்தால், சரியான நேரத்தில், விடைத்தாள் வெளிப்படும். கணினியிலேயே விடைகளை, "டிக்' செய்தால் போதும். தேர்வு முடிந்ததும், மிக விரைவாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இதற்கான அனைத்து மென்பொருளும், முன்கூட்டியே செய்யப்படும். "ஆன்-லைன்' மூலம் தேர்வை எதிர்கொள்வதில், யாருக்கும் பிரச்னை இருக்காது.எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றுவதில், முனைப்பாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு நடராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி