மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற இருக்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கவும் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உயர் மதிப்பெண்கள் பெறவும் உதவிடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
• 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் பாடவாரியான மதிப்பெண்கள் எப்போதும் தலைமையாசிரியர் பார்வையில் இருக்க வேண்டும்.
• குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்ற வகையில் மாணவர் பட்டியல் தனித்தனியே ஒவ்வொரு தேர்வுக்கும் தயாரிக்கப்பட வேண்டும்.
• மூன்று வகையான மாணவர்களுக்கும் தனித்தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
• மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களில் அலகு தேர்வுகள் (Unite Tests) நடத்தப்பட்டு உடனடியான திருத்தப்பட்டு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
• தேர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
• ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொரு பாடத்திலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வழிபாட்டுக் கூட்டத்தின் போது சிறுசிறு பரிசுகள் வழங்கலாம்.
• எந்த பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி அடைகிறார்களோ சிறப்பு கவனம் எடுத்து சொல்லித்தர வேண்டும்.
• மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, Blue Print -ன் படி எனிமையாக, அதிக மதிப்பெண் பெறும் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, பயிற்சியளிக்கலாம்.இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று தலைமையாசிரியர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் ஆலோசனைகள் வழங்கினார்.
Oct 4, 2012
10ம் வகுப்பு தேர்ச்சி அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி