டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2012

டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.இந்தப் பயிற்சியில் 250 தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 120 மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே ஒழிப்பது குறித்தும், தண்ணீரைத் தேங்க விடாமலும், தண்ணீரை மூடிவைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்தப் பயிற்சியை துணை மேயர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி இணை ஆணையர்(கல்வி) வெங்கடேஷ், துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் மகேஷ்வரன், கூடுதல் பொது சுகாதார அலுவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி