தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2012

தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள், நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி