தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அரசு கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களைநிரப்ப, மாநில அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம் மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்களே அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில்,"அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி