சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையை பின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டு மதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன் படுத்தலாம்.
=SUM(LARGE(C13:F13,{1,2}))
அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐ கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.
Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல் Columnமதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Column அதனுடைய தொடர்புடையGrade -ஐ குறிக்கும். இந்த rangeல் மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண் வரையில் முடியும்.
எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐ தேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டிய செல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல் Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar –ஐ click செய்யவும் அதில் =LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும். இந்த வரிசையில் Formula-ஐ இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால் கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும் தோன்றும்.
File Menu-வில் Save –ஐ Click செய்யவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி