கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2012

கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின்நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது.வட்டார மற்றும் மாவட்ட அளவில்சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவம்பர் 30ம் தேதிக்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, www.tn.nic.gov.inஎன்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.மேலும்www.communication.tn.schools.gov.inஎன்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி