மழைக்கால அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2012

மழைக்கால அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அவ்வாறு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர்தேங்கி, சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்படுகிறது. இவ்வாண்டில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வடகிழக்கு பருவமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டாலோ அல்லது இதர பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலோ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077 -இல் தொடர்பு கொண்டும், மேலும் கடலோர பாதுகாப்பு தொடர்பாக உதவி பெற விரும்புவோர் சென்னையில் உள்ள, இயக்குநர், தமிழக காவல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள கட்டணமில்லாத தொலைபேசி எண்.1033-ல் தொடர்பு கொண்டும் உரிய தகவல்களை தெரிவிக்குமாறும், இதன் மூலம் பெறப்படும் தகவலைக் கொண்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி