இன்று விரிவுரையாளர் தகுதித்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2012

இன்று விரிவுரையாளர் தகுதித்தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்,இன்று விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடக்கிறது.மொத்தம் 10 முக்கிய மையங்கள் மூலம், 76 துணைதேர்வு மையங்களில், இத்தேர்வு நடக்கிறது.பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில்வாசன் அறிக்கை:இத்தேர்வை, 58 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதுகின்றனர்.10 ஆயிரத்து 508 பேர் சென்னையிலும், 9,812 பேர் திருச்சியிலும், 7,344 பேர் சேலத்திலும் எழுதுகின்றனர்.மொத்தம் 31 ஆயிரத்து 498 பெண்களும், 26ஆயிரத்து 736 ஆண்களும் எழுதும் இத்தேர்வில்.பெண்களே அதிகம். இதில், 268 பார்வையற்றவர்களும், 991 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.இவர்களுக்கான. சிறப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குரிய தேர்வு மையங்களில் தரைதளத்தில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.மொத்தம் 27 பாடப்பிரிவுகளில் எழுதப்படும்,இத்தேர்வில் 7,345 பேர் கம்ப்யூட்டர் சயன்ஸ்,வணிகவியலில் 6,020 பேரும், 5,516 பேர் உயிர்அறிவியலிலும் தேர்வு எழுதுகின்றனர். மிகக்குறைந்த அளவாக, தத்துவவியலில் 62 பேரும், இசைப்பாடத்தில் 93 பேரும் எழுதுகின்றனர். இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி