இன்றைய TN-TET தேர்வு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2012

இன்றைய TN-TET தேர்வு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

இன்று நடைபெற்ற தேர்வில் கேள்விகள் பழைய தேர்வைப் போன்றே கடினமாக இருந்தது என்றும், இதற்கு 3 மணி நேர கால அளவு தேவையற்றது 2 அல்லது 2.30 மணிநேரம் போதுமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 1 முதல் 8 வரை கட்டாயக் கல்விச் சட்டம் காரணமாக இத்தேர்வு நடத்தப்பெற்றாலும் பாடப்பகுதிகள் 12ஆம் வகுப்பையும் தாண்டிய கடினப்பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.     150க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வில் வெற்றி என்ற போதும் 135 அல்லது அதற்குமேல் எடுக்கும் மதிப்பெண்கள் பணியமர்வுக்கான பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஏனெனில் 135 மதிப்பெண் எடுத்தால் முழு weigthage கிடைக்கும் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு 100 மதிப்பெண் weightageக்கு 60 மதிப்பெண் TETகே  வழங்கப்படுகிறது .

உங்கள் TET அனுபவம் , கருத்து மற்றும் weightage முறைப் பற்றிய உங்கள் பார்வையை comments களாக கீழே பதியுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி