பிளஸ் 2 தேர்வுக்கு 2000 தேர்வு மையங்கள - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2012

பிளஸ் 2 தேர்வுக்கு 2000 தேர்வு மையங்கள

மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரி யில் 2000
தேர்வு மையங்கள் அமைக்க தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளது.பிளஸ்2 வகுப்பு படிக்கும் மாணவ&
மாணவியருக்கு மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்வுகள்
தொடங்கும். கடந்த ஆண்டு 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ,மாணவியர் தேர்வு எழுதினர்.இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ
மாணவியரின் பட்டியல்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும். பிளஸ் 2
தேர்வை தமிழ் வழியில் எழுதும் மாணவர்களுக்கு,
வழக்கம்போல் இந்த ஆண்டும் தேர்வுக்கட்டணத்தில்
விலக்கு அளிக்கப்படுகிறது.ஆங்கில வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தேர்வுக்கட்டணம்
செலுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு
தனித்தேர்வர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் எழுதுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக,சுமார் 8 லட்சத்து 40
ஆயிரம் மாணவர்களுக்காக இந்த ஆண்டு 2000 தேர்வு மையங்கள் அமைக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
50 தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க மனு கொடுத்துள்ளனர்.
முறைகேடுகளை தடுப்பதற்காக, கடந்த ஆண்டு
போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள்,
மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.தேர்வு மையங்களில் போட்டோவுடன் கூடிய வருகைப்பதிவேடு முறையால் ஆள்மாறாட் டம்,
முறைகேடுகள் தடுக்கப்பட்டதால் இந்த ஆண்டும்
இதே முறையில் ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி