மாவட்ட பணி மாறுதல் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2013

மாவட்ட பணி மாறுதல் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம்.

மாவட்ட அளவிலான பணியிட மாறுதல் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் கடந்த 2009ல் 7 ஆயிரம் பேருக்கு இடை நிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர்களுக்கு மாவட்ட அளவிலான பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை.புதிய ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் மாவட்ட பணி மாறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதியவர் களை நியமித்தும் எங்களுக்கு மாறுதல் இல்லை. எனவே ஆசிரியர்கள் தொலைவில் உள்ள மாவட்டங்களில் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். முதல் கட்டமாக 200 ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் மாவட்ட பணி மாறுதல் வழங்கக் கோரி தனித்தனி யாக மனு தாக்கல் செய்ய உள்ளோம்.மேலும் கடந்த 2006ல் ஆறாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட போது எங்களது அடிப்படை ஊதியம் 6,750 ரூபாயாக இருந்தது. தற்போது அடிப்படை ஊதியம் 5,200 ஆக குறைக்கப்பட்டு விட் டது. இந்த ஊதிய முரண்பாட்டை நீக்க கோரியும் போராட்டங்கள் நடத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் முன்னதாக நடந்தது. இதில் மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொருளாளர் கண்ணன் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களையும் சேர்ந்த இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி