தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2013

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்ட கிராமப்பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவ, மாணவிகளே படித்து வருகின்றனர்.நடுநிலைப்பள்ளிகளிலும் இதே நிலையே உள்ளது. 10 மாணவர்களே படிக்கும் பள்ளிகளும் உள் ளன. வெகு சில இடங்களில் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண் ணிக்கை கூடுதலாக உள்ளது.அரசுப் பள்ளிகளுக்காக மாதம்தோறும் செலவிடப்படும் தொகை மற்றும் கல்விக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், அரசு பள்ளிகளிலுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கவேண்டும். கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி என பல் வேறு அடிப்படை வசதி களை உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளி வாகனங்கள் வருவது முக்கியமான காரணம் ஆகும். தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதைகவுரவமாக நினைப்பது போன்ற சிந்தனையும் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதன் பயன், சமச்சீர் கல்வி பற்றிய விளக்கக் கூட்டங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமே அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்,‘ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி