் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை, கட்டாயமாக பெற வேண்டும். இல்லாவிடில், இந்த தேர்வில், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர். பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, மொத்தமுள்ள, 200 மதிப்பெண்களில், 150 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கும், 50 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.அதன்படி, தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களை பெற, எழுத்துத் தேர்வில், 40 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 30 மதிப்பெண்களும் கட்டாயம் பெற வேண்டும். தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வில் பெற்று, செய்முறைத் தேர்வில், 30 மதிப்பெண்கள் பெறாவிட்டால், அறிவியல் பாடத்தில், சம்பந்தபட்ட மாணவர் தோல்வி அடைந்ததாக, தேர்வுத் துறை அறிவிக்கும். இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், அறிவியலில் செய்முறைத் தேர்வு, 2011 - 12ம் ஆண்டு கல்வியாண்டு முதலே, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மொத்தம் உள்ள, 100 மதிப்பெண்களில், எழுத்துத் தேர்வுக்கு, 75 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு, 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், எழுத்துத் தேர்வில், 25 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 10 மதிப்பெண்களும், குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்குரிய, 35 மதிப்பெண்களை பெற, மேற்கண்ட குறைந்தபட்ச மதிப்பெண்களை, மாணவர்கள் கட்டாயம் பெற வேண்டும்.
Jan 2, 2013
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Hello Sir!
ReplyDeleteX th science minimum mark
T=20 (not 25)
P=15 (not 10)
total=35.