ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் கடந்த 13ம்தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் நெல்லை மாவட்டத்தில் வணிகவியல் பாடஆசிரியர் பணியிடத்திற்கு தென்காசியை சேர்ந்த அருண் ஷோபனாவும்உத்தரவு கடிதம் பெற்றார்.இந்நிலையில், நேற்று நடந்த ஆன்லைன் கலந்தாய்வில் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதற்கான அழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், சிஇஓவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஷோபனா கதறி அழுதார்.இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆசிரியை அருண் ஷோபனாவின் உறவினர்கள் சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம்கேட்டனர். அதற்கு, உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என தெரிவித்ததாக பதிலளித்தனர். இதையடுத்து அவர் சிஇஓ அலுவலகத்தில் இருந்து கண்ணீருடன் புறப்பட்டு ஊருக்குச் சென்றார். அவருக்கு சக ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி