ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில் பங்கேற்றும், மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல், மீண்டும், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில், பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறி, தேர்வர்கள், தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்) நீக்கம் செய்து, மீதம் உள்ள, 130 மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் தேர்வுப் பட்டியலை, இணையதளத்தில் நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு, பள்ளி கல்வித்துறையில், இம்மாத இறுதிக்குள், பணிநியமனம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி