பெப்ரவரி 18 [February 18]... இன்று... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2013

பெப்ரவரி 18 [February 18]... இன்று...

நிகழ்வுகள்
*.1229 - புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.
*.1478 - இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராகசதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ் (கிளாரன்ஸ் இளவரசன்) தூக்கிலிடப்பட்டான்.
*.1797 - ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது.
*.1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.
*.1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.
*.1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத்தீயிட்டுக் கொழுத்தினர்.
*.1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.
*.1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
*.1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
*.1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.
*.1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
*.1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*.1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
*.1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற்தடவையாக பனி மழை பெய்தது.
*.1991 - லண்டனில் தொடருந்து நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.
*.2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்டதீயில் சிக்கி 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*.2004 - ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர்.
*.2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீபிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
*.1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
*.1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ.1886)
*.1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)
*.1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)
*.1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.

இறப்புகள்
*.1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)*.1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)*.1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)

சிறப்பு நாள்
*.காம்பியா - விடுதலை நாள் (1965)

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி