அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களை நிர்ணயம் செய்ய மாநில அரசு மூலம் 6 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு சமச்சீர் ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் பல்வேறு துறைசார்ந்த அரசு ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவால் ஊதியம் பரிந்துரைசெய்யப்பட்டது.இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அரசு மூலம் மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது தனது அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசிடம் சமர்பித்துள்ளது.அறிக்கை சமர்பித்து 3 மாதங்கள் ஆகியும் இவ்வறிக்கையினை வெளியிடாமல் அரசு காலதாமப்படுத்திவருவதால் 14 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மத்தியில அதிருப்தி நிலவிவருகிறது. ஆகவே அரசு ஊழியர்களின் அதிருப்திவிலக உடனடியாக மூவர் குழு அறிக்கையினை அரசு வெளியிடவேண்டும். இவ்வாறு கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Feb 18, 2013
Home
PAY
மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிட வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கான மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிட வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கான மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி