குரூப்-2 தேர்வில் வெற்றி: பணி நியமனம் கிடைக்காமல் விதவைகள் அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2013

குரூப்-2 தேர்வில் வெற்றி: பணி நியமனம் கிடைக்காமல் விதவைகள் அவதி.

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றும் ஆதரவற்ற விதவைகள், பணி நியமன ஆணை கிடைக்காமல் நான்கு மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்தாண்டு குரூப்-2 தேர்வில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணி நியமன ஆணை பெற்று, கடந்த அக்டோபர் முதல் வருவாய், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளில் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களோடு சேர்த்து, ஆதரவற்ற விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வு பெற்றவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துவிட்டனர். இவர்களுக்கு மட்டும், இது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இவர்களோடு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குமேல் ஆகிறது.விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வான 200 பேர், அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சென்று பணி நியமன ஆணை குறித்து விசாரிக்கின்றனர்.அவர்களிடம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, இது குறித்து உத்தரவு ஏதும் வரவில்லை எனக் கூறி திருப்பி அனுப்புகின்றனர்.சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சென்று கேட்டால், கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என கூறுகின்றனர். இதனால், தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகும், எந்த காரணமும் கூறாமல், பணி நியமன ஆணையும் வழங்காமல் தாமதப்படுத்துவதால் தேர்வுபெற்ற விதவைகள், யாரிடம் சென்று முறையிடுவது என்ற மன வேதனையில் உள்ளனர்.குருப்-2 தேர்வில், விதவைகள் ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்குவிரைவில் பணி நியமன ஆணை வழங்க, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி