பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு ஆசிரியர்கள் இல்லை: மாணவர்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2013

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு ஆசிரியர்கள் இல்லை: மாணவர்கள் அவதி

அரசு மேனிலைப் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளனர்.கனகம்மாசத்திரம் அரசு மேனிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர், 1,600 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், கடந்த ஆண்டுபொதுத் தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு மாணவர்கள், 255 பேரில், 177 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில், 200 பேரில், 139 பேர் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ், 2 வகுப்பில் வரலாறு, பொருளியல்,தாவரவியல் மற்றும் தமிழ் ஆகிய நான்கு பாடங்களுக்கு, கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் இல்லை. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பள்ளியில் காலியாக இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடத்துக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரியை ஒருவர் பணியில் சேர்ந்தார். ஆனால், அவரும் கடந்த ஜனவரி, 11ம் தேதி முதல், விடுமுறையில் சென்று விட்டார்.இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: இப்பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததால், அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கழிப்பறை இல்லை கடந்த ஆண்டு ஆசிரியர்கள் இருந்தே, 10ம் வகுப்பில், 69 சதவீதமும், பிளஸ் 2வில், 56 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் மோசமாக இருக்கும் என, தெரிகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால், அவர்கள் திறந்தவெளியில், தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறையும், புதருக்குள் அமைந்து உள்ளது.பள்ளியின் பின்புறம் சுற்றுச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள், பள்ளிக்குள் நுழைந்து சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறுகையில், "குறிப்பிட்ட பள்ளியில் அண்மையில் ஆய்வுக்கு சென்ற போது, இந்த விவரம் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை, அப்பள்ளியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்றார்.மேலும், "பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகள் பள்ளியில் நுழைவதை தடுக்க, காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி