தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வாகியுள்ள தட்டச்சர்களுக்கு, மூன்று மாதங்களாக பணி நியமன ஆணை வழங்காமல்இழுத்தடிக்கப்படுவதால், பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.தமிழக அரசின் பல துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் குரூப்-4 தேர்வு நடத்தியது. ஸ்டெனோகிராப்பர்-1074, இளநிலை உதவியாளர்-5500, தட்டச்சர்-3674மற்றும் டிராப்ட்மேன், சர்வேயர் ஆகிய 10 ஆயிரத்து 800 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வின் முடிவு கடந்த ஆண்டு அக்., 8ல் வெளியானது.தேர்வானவர்களுக்கு நவம்பரில் கவுன்சிலிங் நடந்தது. டிசம்பரில் அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, 20 நாளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்கள் பணியிலும் சேர்ந்து விட்டனர். ஆனால், தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி, 3 மாதங்களாகியும், இன்னும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.நேர்முகத் தேர்வின் போது, அவரவர் சார்ந்த மாவட்டங்களில் உள்ளபணியிடங்களில் நியமிக்க உள்ளதாகவும், விரைவில் பணி நியமன உத்தரவு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்படும், என்றும் கூறி, அனுப்பியுள்ளனர்.இதனால், தமிழகம் முழுவதும் தட்டச்சர் பிரிவில், தேர்வாகியுள்ள3674 பேரும், தினமும் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களுக்கு,பணி நியமன உத்தரவிற்காக அலைகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி