பி.எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2013

பி.எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?

நடப்பு நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை, 8.5 சதவீதமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், இந்த வட்டியை அதிகரிக்க வேண்டும் என, தொழிலாளர்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்,மத்திய அறக்கட்டளை வாரிய (சி.பி.டி.,) கூட்டம், வரும், 15ம் தேதி நடக்கவுள்ளது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான வட்டி வீதம், 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி