தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.குறிப்பாக கிராமங்கள் முதல் பெரும் நகரம் வரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளதால், பெரும்பலான பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர்.அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெற்றோர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முடிவு செய்தது.நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து ஆங்கில வழி கல்விதுவக்கப்பள்ளியில் துவங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளததை அடுத்து வரும், ஆண்டில் மாநிலம் முழுவதும் கூடுதல் ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளிகளை துவங்க முடிவு செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி