சிறுபான்மை மொழிப் பாடங்களில் தேர்வு பெற்றவர் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2013

சிறுபான்மை மொழிப் பாடங்களில் தேர்வு பெற்றவர் பட்டியல் வெளியீடு.

சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.ஆசிரியர்தேர்வுவாரியம்(டி.ஆர்.பி.,)அறிவிப்பு:பட்டதாரி,சிறுபான்மைமொழிப்பாடங்களுக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில்,தேர்வுபெற்ற, 36 பேரின் பெயர்பட்டியல்,டி.ஆர்.பி.,அலுவலக,அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.மலையாளவழியில், 12பேர்;தெலுங்கு, 13;உருது, 9பேர்என, 34 பேர்,தேர்வுபெற்றுள்ளனர்.முதுகலை ஆசிரியரில்,உருது வழியில் ஒருவரும்;தெலுங்குவழியில் ஒருவரும் தேர்வுபெற்றுள்ளார்.இவர்களின் தேர்வுப்பட்டியல், 18ம் தேதி,டி.ஆர்.பி.,இணையதளத்தில்வெளியிடப்படும்.இவ்வாறுடி.ஆர்.பி.,அறிவித்துள்ளது.பட்டதாரிஆசிரியரில்,மேற்கண்ட நான்கு மொழிகளில், 92 பேர்,டி.இ.டி.,தேர்வில் தகுதி பெற்றிருந்தும், 34 பேருக்கு மட்டுமே,வேலைகிடைத்துள்ளது. 58பேர்,அவர்கள் சார்ந்த பாடங்களில் காலிபணியிடங்கள் இல்லாததாலும்,குறிப்பிட்ட இனசுழற்சியில்,தேர்வர் இல்லாததாலும்,அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என,டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.மலையாளத்தில், 57பேர்,தகுதிபெற்றிருந்தும், 12பேர்மட்டுமே,இறுதியாக தேர்வு பெற்றனர்.இவர்கள்,கணிதம்,இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.மற்றவர்கள்,மலையாள மொழிப்பாடத்தையே,பிரதானமாகஎடுத்துபடித்துள்ளனர்.மொழிப்பாடத்தில்,காலிபணியிடம் இல்லாததால்,அவர்களுக்கு வேலைகிடைக்கவில்லை எனவும்,துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி