வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2013

வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு முடிவு.

வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்கிறது என்று அதன் செயலர் வா.அண்ணாமலை தெரிவித்தார்.பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்டக் கிளையின் முப்பெரும் விழாவில்அவர் பேசியது:மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்புஅகில இந்திய அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்கிறது.தமிழகத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி வரும் 20-ம் தேதி மாலையில் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும், வரும் 10-ம் தேதி போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.முப்பெரும் விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் கோ.முருகேசன், பொதுச் செயலர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் மா.நம்பிராஜ், துணைச் செயலர் அ. முனியாண்டி ஆகியோர் பேசினர். மாவட்டத் தலைவர் க.உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அ. உமாசங்கர் வரவேற்றார். செயலரும், மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினருமான மி. வின்சென்ட் அறிக்கை வாசித்தார். மகளிரணி செயலர் பி.கதிஜா மெஹர்பானு, துணைத் தலைவர் சே. ஜான்சிராணி, துணைச் செயலர்கள் பா.சுந்தர்ராஜ், செ.மாணிக்கராஜ் மற்றும் வட்டாரச் செயலர்கள் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:2010 ஆகஸ்டுக்குப் பின் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நியமன ஆசிரியர்களைஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று பணிநீக்கம் செய்யும் அரசின் கொள்கை முடிவைக் கைவிட வேண்டும்.நிறுத்தி வைக்கப்பட்ட மாத ஊதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி