அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2013

அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை(239) திருத்தம் செய்யவேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பு செயற்குழு கூட்டம் நேற்று கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கூட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர்விஜயன் முன்னிலை வகித்தார். பரமசிவம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக அரசால் கடந்த 20.9.2012ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1978-79 கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட பி.டி., அல்லது பி.இ.டி.,முடிக்காத முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணிப்பலன், மற்றும் பணப்பயன்கிடைக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த அரசாணையை திருத்தம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி